1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10th, 11th and 12th class students do not have main exams - Minister Information

10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு!

மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு!
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரொனா தொற்று பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. எனவே ஆன்லைன் மூலமாக அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தம் நடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகள் தொடங்க  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், பள்ளிகள் துவங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
விமானக் கட்டணத்துக்கு இணையாக பேருந்து கட்டணம்… ஓபிஎஸ் கண்டனம்!