செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:44 IST)

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி - மத்திய அமைச்சர் தகவல்

2- 18 வயதுள்ள குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசிக்கு குழந்தைகளுக்கான  மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் வலார் பேட்டியளித்துள்ளார்.

2 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 2-18 வயதுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது எனவும், இதுதொடர்பாக நிபுணர் குழு தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் குழந்தைகளுக்கான மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் வலார் பேட்டியளித்துள்ளார்.