வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (17:49 IST)

103 கொரோனா மரணங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லையா? அதிர்ச்சி தகவல்

நெல்லையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 103 பேர் விடுபட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் பலியானவர்களின் எண்ணிக்கையையும் தினமும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பின்படி நெல்லை மாவட்டத்தில் இதுவரை 182 பேர் கொரோனாவால் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்? என்ற கேள்விக்கு 255 பேர் என்ன பதில் வெளிவந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்ட கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 103 பேர் விடுபட்டு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இதுகுறித்து தமிழக சுகாதார துறை விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்க உள்ளது