ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (13:42 IST)

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அதாவது செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 15 வரை 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது 
 
Edited by Mahendran