தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி – மக்கள் மகிழ்ச்சி !

Last Modified ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (15:05 IST)
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு வாரமாகப் படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த மாதம் முதலாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. உலக பொருளாதார மாற்றங்கள் தங்கம் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாய் வரை உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக விலை குறைந்து வருகிறது.

அதன்படி தங்கம் விலை நேற்று மட்டும் ரூ.224 குறைந்து ரூ.28,672-க்கு விற்கப்பட்டது. இந்த விலைக்குறைவால் மீண்டும் கடைகளில் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :