தொடர்ந்து விலை குறைந்து வரும் தங்கம்: மக்கள் மகிழ்ச்சி

Prasanth Karthick| Last Modified வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:39 IST)
கடந்த மாதத்தில் திடீரென விலை உயர்ந்த தங்கம் தற்போது படிப்படியாக விலை குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதி அளித்திருக்கிறது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையாலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதாலும் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. சவரனுக்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக விலை உயர்ந்ததால் திருமணத்திற்கு தங்க நகைகள் வாங்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை வேகமாக குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு  112 ரூபாய் குறைந்து 29,160 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த ஆபரண தங்கம் இன்று மேலும் 128 ரூபாய் குறைந்து 28,944 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 8 நாட்களில் தங்கம் விலை 1,176 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் விலை குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :