செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2020 (16:45 IST)

4 ஆண்டுகளில் 100 ஆணவக்கொலைகளா??

தமிழகத்தில் மட்டும் 4 ஆண்டுகளில் 100 ஆணவ கொலைகள் நடந்திருக்கிறது என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு,தமிழரசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களிலும் வளர்ந்து வரும் நகரங்களிலும் சாதிய வேற்றுமை என்பது தலைவிரித்து ஆடி வருகிறது. மேலும் ஆணவக் கொலைகள் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், “தமிழகத்தில் மட்டும் 4 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாக தனியார் புள்ளி விவரங்கள் கூறுகிறது. இந்த தேசம் சமூக நல்லிணக்கத்தை அடியோடு புதைத்து சமூகத்தில் பிளவை அதிகரிக்கும் ஆபத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும், “பாஜக ஆட்சி, தேசிய அளவில் வன்கொடுமைச் சட்டத்தின் அதிகாரத்தையும், தண்டனையையும் கடுமையாக உறுதியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.