”ரஜினி சிந்தித்து பேச வேண்டும்” ஸ்டாலின் வேண்டுகோள்

Arun Prasath| Last Modified செவ்வாய், 21 ஜனவரி 2020 (13:36 IST)
பெரியார் குறித்து ரஜினி சிந்தித்து பேச வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், திராவிட கழகத்தில் ரஜிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது “நான் செய்திகளில் வெளிவந்ததைத்தான் கூறினேன், நான் மன்னிப்பு கேட்க முடியாது” என கூறினார்.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், “பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும் என்பதே நண்பர் ரஜினிக்கு தான் வைக்கும் வேண்டுகோள்” என கூறியுள்ளார். மேலும் “ ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர்” எனவும் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :