1971 பேரணியில் பெரியார் நிறைவேற்றிய 10 தீர்மானங்கள் இவைதான்: முக ஸ்டாலின் இதை ஏற்பாரா?
1971ஆம் ஆண்டு நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் பெரியாரால் நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களை பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த தீர்மாங்கள் பின்வருமாறு:
மத உணர்வை புண்படுத்தும் இபிகோ சட்டப்பிரிவை எடுத்துவிடவேண்டும்
கடவுள் மதத்துக்கு அரசு பாதுகாப்பு கூடாது
ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதை குற்றம் ஆக்கக்கூடாது
கடவுள், மதம், ஜாதி, மொழி, தேசம் ஆகியவற்றில் பற்றி இருக்கக் கூடாது
சுப்ரீம் கோர்ட்டை எடுத்துவிடவேண்டும்
பார்ப்பனர்களை பிராமணர்கள் என்று சொல்லக்கூடாது
பார்ப்பனப் பத்திரிகைகளை தமிழர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்
இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல நாம் இந்துக்கள் அல்ல
வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் அல்ல என்று கூறவேண்டும்
ஜாதியை ஒழிப்பது என்றால் பார்ப்பன துவேஷிக்க வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் தான் பெரியார் பேரணியில் கொண்டு வந்த தீர்மானங்கள் என பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்