1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (11:03 IST)

ரூ.115 கோடியில் 10 புதிய பேருந்து நிலையங்கள்: போக்குவரத்து துறை அறிவிப்பு!

bus
தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 115 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருப்பூர், கூடலூர், அரியலூர், கடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல் மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
 
இதற்காக 115 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 10 பேருந்து நிலையங்களில் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
 
Edited by Siva