தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள்! எங்கெங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 10 நகராட்சி, ஊரக பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் சூழலில் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல பகுதிகளில் இயங்கி வரும் சிறிய பேருந்து நிலையங்கள் அதிக பேருந்துகளை இயக்குவதில் சிரமம் உள்ளதோடு, கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் நவீன வசதிகள் இல்லாமலும் உள்ளன.
இந்நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்களை 10 இடங்களில் அமைக்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர், ஓசூர், கூடலூர், அரியலூர், வடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல் மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ரூ.115 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K