1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (22:43 IST)

அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகள் கூறிய விஜயகாந்த்

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்   நேற்று  அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதையடுத்து, திமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், உடன்பிறப்புகள் அரசியல் தலைவர்கள் சினிமா துறையினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறினர்.

இந்த நிலையில், இன்று இசைஞானி இளையராஜா தன் டுவிட்டர் பக்கத்தில், உதய நிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj