1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (17:53 IST)

தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi
தமிழ்நாட்டில் பீச் ஒலிம்பிக் போட்டி நடைபெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுடன் அமைச்சர் உதயநிதி கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது முதலமைச்சர் தங்க கோப்பை போட்டிகள் ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்
 
மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி போன்றே பீச் ஒலிம்பிக்ஸ் போட்டி தமிழ்நாட்டில் நடந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்
 
Edited by Siva