ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:07 IST)

10 மாவட்ட தலைநகரங்களில் பிரமாண்டமான சந்தைகள்: முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் 10 மாவட்ட தலைநகரங்களில் பிரம்மாண்டமான சந்தைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்காக 20 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
விவசாயிகள் பயிர் செய்யும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 20 கோடி ரூபாய் செலவில் 10 மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் பிரம்மாண்டமான சந்தைகள் கட்டப்படும் என இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் 
 
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பேசிய அவர் நான்கு ஆண்டு நிறைவுபெற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தனது அரசு இரவு பகல் பாராமல் விவசாயிகளுக்காக பணி செய்து வருவதாகவும் விரைவில் அமைய உள்ள பிரமாண்டமான சந்தையின் மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை தாங்களே நேரடியாக சந்தைகளில் சென்று விற்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது