செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:36 IST)

முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை.. மதுரையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்  தனது மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் அந்த தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அதிக கடன் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடன்காரர்கள் நெருக்கடி தாங்க முடியாமல் முன்னாள் ராணுவ வீரர் அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் விஷம் நிறைந்து தற்கொலை செய்து கொண்டனர். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva