1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (12:53 IST)

அனுமன் ஜெயந்தி விழா! ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை..!

namakkal anjanaya
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. 
 
புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.  ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடை மாலை சாத்தபட்டது. நேற்று ஒரு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் திரை விலக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டு ஆஞ்சநேயர் அருளை பெற்றனர். கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டன. 

temple
இதேபோல் கோவை பீளமேட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ராஜ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார். ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் வாசனை திரவியம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும், ஆயிரம் குடம் பால் கொண்டு பிரம்மாண்ட அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.