1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (10:02 IST)

அனுமன் ஜெயந்தி விழா.! தெப்பக்குளத்தில் ஆறாட்டு வைபவம்.! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

hanuman
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற  திருவட்டார் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 
மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 11ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது
 
இந்நிலையில் அனுமன் ஜெயந்தியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற    திருவட்டார் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பஞ்சமூக ஆஞ்சநேயருக்கு தயிர், பால், தேன், சந்தனம், பன்னீர் இளநீர், துளசிநீர், கரும்புசாறு, களபம் உள்ளிட்ட 8 வகை பொருட்களால் அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. 
 
தொடர்ந்து பலவகை மலர்களால்  புஷ்பாபிஷேகத்துடன் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் ஆஞ்சநேயருக்கு ஆறாட்டு வைபவம் நடைபெற்றது.  இதில் கேரளா,தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.