செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (15:14 IST)

எடப்பாடி காலில் விழுந்த விஜய் ? பின்னணி என்ன

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
 
நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “மாஸ்டர்”. கடந்த ஏப்ரலிலேயே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக பல மாதங்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
 
மேலும் கொரோனா காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகாததால் திரையரங்குகளும் மாஸ்டர் ரிலீஸ எதிர்நோக்கி காத்துள்ளன.
 
இந்நிலையில் நடிகர் விஜய், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13 அன்று மாஸ்டரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஓவர்சீஸ் திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 100% திரையரங்குகளை ஒதுக்குதல் தொடர்பாக கோரிக்கை விடுத்திருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இதனிடையே சமூக வலைத்தளமான டிவிட்டரில் #எடப்பாடிகாலில்விழுந்தவிஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. அதாவது பட ரிலீஸுக்காக விஜய் இவ்வாறு செய்ததாக கிண்டலடித்து வருகின்றனர்.