திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 24 அக்டோபர் 2024 (07:11 IST)

திமுக அரசுக்கு எதிராக ட்வீட் போட்ட மதுரை எம்பி வெங்கடேசன்? பெரும் பரபரப்பு..!

பெரும்பாலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி தலைவர்கள் திமுக அரசுக்கு ஆதரவாகவே அறிக்கை விடுவார்கள் என்பதும், சமூக வலைதளங்களிலும் திமுக அரசுக்கு ஆதரவாகவும், திமுக அரசின் சாதனைகளை போற்றி புகழும் வகையிலேயே அவர்களது ட்வீட்கள் இருக்கும் என்பதும் தெரிந்தது.

தமிழகத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும், கூட்டணி கட்சியினர் அமைதியாக இருப்பார்களே தவிர, திமுக அரசை பெரும்பாலும் விமர்சனம் செய்வதில்லை என்பதே கடந்த மூன்று ஆண்டுகளாக நிலை என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை எம்பி வெங்கடேசன் திடீரென திமுக அரசுக்கு எதிராக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில், அரசுக்கு கண்டனம் தெரிவித்து அவர் பதிவு செய்த ட்வீட் பின்வருமாறு:

அதீத மழை மற்றும் எதிர்பாராத வெள்ள நீரால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நிர்வாகத்தின் கவனக் குறைவாலும், முன்னெச்சரிக்கை இன்மையாலும் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது.

Edited by Siva