திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (18:07 IST)

துபாயில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்ற தமிழக மாணவி:தமிழக அமைச்சர் பாராட்டு....

துபாய் ஜிடெக் தொழில்நுட்ப கண்காட்சியை யொட்டி எதிர்கால தொழில்துறையில் பயன்படுவதற்கான சிறந்த யோசனை வழங்கும் போட்டி நடை பெற்றது. 
 
அதில் துபாயின் ஹெரியட்வாட் கல்லூரியில் பயின்றுவரும் தமிழக மாணவி ஸ்வப்னா மணிகண்டன் முதல் பரிசு வென்றார். 
 
விழாவிற்கு தமிழகத்தின் சார்பில் வருகைதந்திருந்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
 
அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.