திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (07:39 IST)

மனைவியிடம் ஆபாசமாகப் பேசிய ஊழியர்கள் ! கொதிந்தெழுந்த கணவன் செய்த செயல் !

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பஜாஜ் அலையன்ஸ் நிதி நிறுவனத்துக்கு நபர் ஒருவர் அரிவாளோடு வந்து மிரட்டிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

தேனி மாவட்டம், கம்பத்தில் இயங்கி வரும் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் செல்போன் ஒன்றை மாதத் தவணை முறையில் பெண் ஒருவர் வாங்கியுள்ளார். முதல் சில மாதங்கள் ஒழுங்காக தவணையைக் கட்டிய அவர், அதன் பின் சில காரணங்களால் கட்டாமல் இருந்துள்ளார். இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு போன் செய்து கடுமையாக பேசியுள்ளனர். அதில் யாரோ ஒருவர் ஆபாசமாகப் பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் இதுபற்றி தன் கணவரிடம் சொல்லி வருந்தியுள்ளார். ஆத்திரமடைந்த கணவர், கோபத்தில் அரிவாளோடு பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கு வந்துள்ளார். அவரை அந்த கோலத்தில் பார்த்து மிரண்டு போன ஊழியர்கள், அவரிடம் பேச்சு கொடுத்து வெளிப்புறக் கதவை சாத்தி அவரை உள்ளே அடைத்துள்ளனர். போலிஸுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் வரும் முன்னரே அந்நபர் பின்வாசல் வழியாக தப்பித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் ஊழியர் ஒருவர் அந்நபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.