புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜூன் 2020 (19:57 IST)

வெட்டுக்கிளிகளை அழிக்க நூதன கூண்டு! சேலம் மாணவர் கண்டுபிடிப்பு!

வட இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதமாகும் நிலையில் அதை அழிக்க சேலம் பொறியியல் மாணவர் ஒரு மின் வளையை கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் படைகள் ஊடுருவி, பயிர்களை தேசம் செய்து வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் தற்போது பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலத்தில் அதிகமான அளவில் பரவி உள்ளது. தமிழகத்தில் கூட கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் கூட்டம் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மின் வளையை வடிவமைத்துள்ளார். குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு வித துளை அளவுகளில் இரு கம்பிகள் அமைக்கப்பட்டு அதன் நடுவில் பல்ப் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. வெளிச்சத்தால் ஈர்க்கப்படும் வெட்டுக்கிளிகள் அதனுள் வரும் போது மின்சாரம் தாக்கி அழிக்கப்படும். இந்த வளையின் மூலம் வினாடிக்கு 100 வெட்டுக்கிளிகள் வரைக் கொல்லப்படும் என அம்மாணவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட கொசு பேட் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளைக்கு ஒரு ஏக்கருக்கு 11 ஆயிரம் வரை செலவாகும் என சொல்லப்படுகிறது.