தனிமைப்படுத்தப்படுகிறதா வட சென்னை!? – இன்று முதல்வர் உரை!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் 5 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு மேல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார். சென்னையில் கொரோனா அதிகரித்து வருவதால் அதன் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படலாம் என பேசப்பட்டு வந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான முக்கியமான பல அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.