செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (18:15 IST)

சூர்யாவை உதைத்தால் பணம் தருவதாக அறிவித்த பாமக நிர்வாகி மீது வழக்குப்பதிவு !

நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் என பேசிய பாமக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, ‘நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன்” என தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் நிர்வாகிகள் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து,  நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன்” என தெரிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது இன்று காவல் நிலையத்தி 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.