கண் பார்வைக்கு உதவும் திரிபலா சூரணம் !!

Thiripala Suranam
Sinoj| Last Modified செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (23:57 IST)
சூரணம் என்பது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் இவை மூன்றின் கலவையில் செய்யப்படும் பொடிவகை ஆகும்.

திரிபலா உடல் எடையை குறைப்பதில் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். இது உடலில் உள்ள கோலிசிஸ்டோகினின் ஹார்மோனின் சுரப்பை ஊக்குவித்து செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.

வயிற்று கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கிறது. ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் கலக்கி குடிக்கலாம்.

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்த கலவையான திரிபலா பொடியானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

திரிபலா கண்களுக்கு ஒருசிறந்த மருந்தாகும். நல்ல கண் பார்வையை பராமரிக்க உதவுகிறது. கண் சிவத்தல், வெண்படலம், கண்புரை போன்ற கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
கணினி அதிகம் பயன்படுத்துபவரின் கண்களை பாதுகாக்க உதவுகிறது. திரிபலா சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து சிறிது நேரம் கழித்து பருத்தி துணியால் வடிகட்டி அந்த நீரால் கண்களை கழுவிவர நல்ல பலன் கிடைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :