வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக விளங்கும் திரிபலா சூரணம் !!

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது.

திரிபலா நமது கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
 
உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். திரிபலாவில் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவக் குணம் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் வெகு சீக்கிரத்தில் குறைக்க முடியும்.
 
திரிபலா சூரணம் இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றுகிறது.
 
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி,சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.
 
பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது.
 
புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் எனப்படும் பெருமளவு புற்று செல்கள் வளரும் அபாயத்தையும் குறைத்து, உடல்நலனை காக்கிறது.