1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
  4. october month numerology prediction

அக்டோபர் 2020 - எண்ணியல் பலன்கள்: 2, 11, 20, 29

அக்டோபர்
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு... 
 
குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக  பேசுவது நன்மை தரும்.  கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த  கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும்.  மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.   
 
பரிகாரம்: துளிஸியை பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அக்டோபர் 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30