செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 29/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

மிதுனம்:
 
இன்று மிதுனம் ராசிக்காரர்களுக்கு வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும்.
 
கடகம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
 
சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின்  உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.
 
விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.  வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.
 
தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை  கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.
 
மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு  உண்டாகலாம்.
 
கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு மாணவர்கள் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். வீண்  அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும்.