செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (15:13 IST)

அக்டோபர் 2020 - எண்ணியல் பலன்கள்: 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
வாழ்வில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை.  உழைப்பு வீணாகலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான  சிந்தனை தோன்றும்.

அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.  மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். 
 
பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.