1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
  4. Astrology of June month numerology prediction

ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

ஜூன்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும்.



உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.

செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நன்மையை தரும். பெண்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு இலுப்பை எண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.
அடுத்த கட்டுரையில்
ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29