காதல் காட்சிகளில் வேறு வழியின்றி பல்லைக் கடித்துக்கொண்டு நடித்தேன்: அர்ஜூன் ரெட்டி ஹீரோயின்
அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்ததபோது என் காதல் நினைவுக்கு வந்தது என நடிகை ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷாலினி பாண்டே அர்ஜூ ரெட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தில் அஜய் தேவரகொண்டாவுடன் நடித்தது குறித்து அவர் கூறியதாவது:-
கல்லூரியில் படித்தபோதும் சினிமாவுக்கு வந்தபோதும் இரண்டு முறை காதல் தோல்வி அடைந்தேன். காதல் தோல்வியில் இருந்தபோதுதான் அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்தேன். காதல் காட்சிகளில் நடித்தபோது என் காதல் நினைவுக்கு வந்தது நரக வேதனையாக இருந்தது. வேறு வழியின்றி பல்லைக் கடித்துக்கொண்டு நடித்தேன் என்று கூறியுள்ளார்.