திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ராகு, சனி தோஷங்களிலிருந்து போக்க வடை மாலையா?

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை சாத்துதல், பூ மாலை சாத்துதல்  என்று பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடனை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் வடைமாலை சாத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதால் அவருக்கு கீழ்ப்படிந்தார்கள்.
பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் இடையூறுகள் ஏற்பட்டால் அவர்களை திருப்திப்படுத்துவதற்கு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள் எண்ணெய்யும் கொண்டு வடை செய்யவேண்டும். அந்த வடையை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி பகவான், ராகு இருவரின்  தொல்லைகளில் இருந்து மனிதர்கள் விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.