ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Last Modified சனி, 29 டிசம்பர் 2018 (17:39 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மிகுந்த அறிவும் திறமையும் கொண்டு காணப்படும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு காரியங்கள் அனைத்தும் அனுகுலமாகவே இருக்கும். முன்கோபம் இருக்கும் அதனை கொஞ்சம் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள். பணவரவு சூழ்நிலை சுமாராக இருக்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு கருத்து வேற்றுபாடுகள் நிறைந்திருக்கும் சிறிது கவனம்  தேவை. கலைத்துறையினருக்கு  வேலை பழுகூடும். அரசியல்துறையினருக்கு தங்களின் எண்ணம் நிறைவேறும்.  மாணவர்களுக்கு  கல்வியில் மிகுந்த ஆர்வம் நிறைந்திருக்கும்
 
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.


இதில் மேலும் படிக்கவும் :