ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Last Modified சனி, 29 டிசம்பர் 2018 (17:37 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

தங்களின் உந்நதமான குணத்தால் உயர்ந்து வரும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் தங்களின் தொழில் திறமையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். பணவரவுக்கு அனுகூலம் நிறைந்திருக்கும். மற்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். எதிர்ப்புகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு இருக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வரும்.  பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. 

பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அர்சியல்துறையினருக்கு பழைய பாக்கிகள்  வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் நிறைந்திருக்கும். கல்வியில் தேர்ச்சி பெறவதற்கு கூடுதல் கவனம் தேவை.
 
பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :