ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Last Modified சனி, 29 டிசம்பர் 2018 (17:30 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். 

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல்துறையினருக்கு காரிய தடங்கல்கள் நீங்கும். கலைத்துறையினருக்கு அதிக நேரம் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள்.
 
பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணூவை புதன்கிழமி அன்று வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.இதில் மேலும் படிக்கவும் :