ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (17:35 IST)

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உண்மை வழியிலேயே  நடக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் தீர்கமான முடிவெடுத்து அதில் வெற்றி காண்பிர்கள். தைரியமான மனநிலை இருக்கும். எந்த ஒருச் செயலையும்  சாமர்த்தியமாக தன் வசப்படுத்திக்கொள்வீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். முக்கிய முடிவு எடுக்கும் போது கவனத்துடன் செயல்படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் திறமையைக்காட்டும் வாய்ப்பாக அமையும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும்  தங்களின் நெலிவு சுழல் அரிந்து செயல்பட்டால்தான் அக்காரியம் சித்தியில் முடியும்.. கலைத்துறையினருக்கு தொழிலில் முழுகவனம் செலுத்தவேண்டும். அரசியல்துறையினருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கபெற்று மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பாடங்களை படிப்பதில் மிகுந்த் ஆர்வமாக இருக்கும். உயர்கல்வி கற்ப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.