திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

முட்டை பணியாரம் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
முட்டை - மூன்று
சிக்கன் கபாப் மசாலா - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 7
பீன்ஸ் - 4
கேரட் - ஒன்று
பச்சைப் பட்டாணி - கால் கப்
காலிஃப்ளவர் - சிறிதளவு
உருளைக்கிழங்கு (சிறியது) - ஒன்று
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: 
 
வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய  சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் மற்றும் பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கிளறவும். 
 
இதனுடன் சிக்கன் கபாப் மசாலா, கரம் மசாலா, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித் தழை தூவி, எலுமிச்சைச் சாற்றை ஊற்றிக் கிளறி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்த காய்கறி மசாலாவை, 5 நிமிடம் ஆறவிடவும். 

பிறகு மூன்று முட்டைகளை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். பின்பு ஆறிய காய்கறி கலவையை முட்டையுடன் சேர்க்கவும். பணியாரக்கல்லின் குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, முட்டை - காய்கறி கலவையை ஊற்றி, பணியாரங்களாக சுட்டெடுக்கவும். சுவையான முட்டை பணியாரம் தயார்.