1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (16:02 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வரதராஜனின் நண்பர் மரணம்

நடிகரும் செய்தி வாசிப்பாளரான வரதராஜன் அவர்கள் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் பின்னர் அவர் பட்டபாடு என்ன என்பது அனைவரும் அறிந்ததே. தனது நண்பர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சென்னையில் உள்ள எந்த மருத்துவமனையிலும் பெட் கிடைக்கவில்லை என்றும் கண்ணீருடன் அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் அவர் கூறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நண்பர் சமையல் செல்லப்பா என்பது தற்போது தெரியவந்துள்ளது. சென்னையை சேர்ந்த சமையல் செல்லப்பா சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புகழ் பெற்றவர் என்றும் எந்த ஒரு பெரிய திருமணம் என்றாலும் அவருடைய சமையல்தான் நடக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இவ்வாறு லட்சக்கணக்கான திருமணத்திற்கு சமையல் செய்துள்ள அவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும் அதன் பின்னர் அவர் பல மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் கடைசியில் ஒரு தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
சமையல் செல்லப்பாவின் மறைவு செய்தி வாசிப்பாளர் வரதராஜனுக்கு மட்டுமின்றி அவருடைய சமையலை ருசித்து சாப்பிட்ட அனைவருக்குமே அதிர்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது