புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவையான மட்டன் கபாப் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
மட்டன்கொத்துக்கறி - 150 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி,
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி,
மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
உப்பு - சிறிதளவு

செய்முறை:
 
மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த மட்டன் கொத்துகறியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மட்டன் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
கலந்த மட்டன் கலவையை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள  மட்டன் குச்சிகளை வைத்து நன்றாக திருப்பி விட்டு நன்கு வறுத்து எடுக்கவும். சூப்பரான சுவையான மட்டன் கபாப் தயார்.