திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சிக்கன் நூடுல்ஸ் செய்ய...!!

தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 100 கிராம்
லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
செய்முறை:
 
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்சை வேக வைத்து  தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
 
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேகவைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை அதில் சேர்க்க வேண்டும். 
 
சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத்தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி பறிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.