எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
பச்சை மிளகாய் - 5
முற்றாத கத்தரிக்காய் - 300 கிராம்
எண்ணெய் - 200 கிராம்
 
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:
 
கசகசா - 1/2 1 மேசைக் கரண்டி
துருவிய தேங்காய் - அரை கப்
தனியா - 1 மேசைக் கரண்டி
பூண்டு - 6 பல்
எள்ளு - 1/2 மேசைக் கரண்டி
கடுகு எண்ணெய் - 1 மேசைக் கரண்டி
வெந்தயம் - 1/2 மேசைக் கரண்டி
கடுகு - சிறிதளவு
பெருஞ்சீரகம் - 1/2 மேசைக் கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 மேசைக் கரண்டி
பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 மேசைக் கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக் கரண்டி
புளி கரைசல் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை: 
 
காய்கறிகளை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வைத்துக்கொள்ளவும். மற்றொரு கடாயில் கடுகு எண்ணெய்யை ஊற்றி வெந்தயம், கடுகு, பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை வறுத்தி கொள்ளவும். அதனுடன் பூண்டைச் சேர்த்து  பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் அரைத்த விழுது, புளிக் கரைசல், உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்க்கவும்.
தேவைக்கேற்ப குழம்பின் பதத்தை மாற்றிக் கொள்ளவும். (அதாவது திக்காகவும் அல்லது கொஞ்சம் தண்ணீர் போலவும் அவரவர்  விருப்பத்துக்கு ஏற்ப) அதன் பின்னர் வதக்கப்பட்ட மிளகாய்களையும் கத்தரிக்காய்களையும் சேர்த்து சமைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து  கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சேர்த்து பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :