சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு செய்வது எப்படி?

சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு செய்வது எப்படி?


Caston| Last Modified ஞாயிறு, 4 ஜூன் 2017 (14:36 IST)
மீன் என்றால் பலருக்கும் பிடிக்கும் அதனை வித்தியாசமாக சமைத்து மணமணக்க சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு இந்த தேங்காய்ப்பால் மீன் குழம்பு நிச்சயம் பிடிக்கும். இதனை செய்வது எப்படி இதற்கு தேவையான பொருட்கள் என்ன என பார்ப்போம்.

 
 
தேவையான பொருட்கள்:
 
அரை கிலோ மீன், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று தக்காளி, தேங்காய்ப்பால் இரண்டு கப், 4 தேக்கரண்டி மீன் குழம்பு மசாலா, 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் வெந்தயம், பச்சை மிளகாய் நான்கு, ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது, இரண்டு கப் புளி தண்ணீர், உப்பு தேவையான அளவு.
 
செய்முறை:
 
மேலே குறிப்பிட்ட அளவு வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் சிறுது நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து அதனுடன் வதக்கவும். தக்காளி வதங்கி பின்னர் பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மீன் குழம்பு மசாலா சேர்க்க வேண்டும். அதனுடன் புளித்தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 
குழம்பு கொதித்ததும் அதனுடன் மீன் சேர்த்து பாதியளவு வேக விட்ட பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் தெளிந்து மேலே வந்த உடன் இறக்கவும். தற்போது தேங்காய்ப்பால் மீன் குழம்பு தயார். இதனை மதிய அரிசு உணவு, தோசை, இட்லி போன்ற உணவுடனும் உண்ணலாம்.


இதில் மேலும் படிக்கவும் :