வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

நாக்கில் எச்சில் வரவழைக்கும் வஞ்சிர மீன் குழம்பு செய்ய...!

தேவையானவை:  
 
வஞ்சிரம் மீன் - 500 கிராம் 
சின்ன வெங்காயம் - 200 கிராம்
நாட்டுத் தக்காளி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு, புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 100 மி.லி
வெந்தயம் - 50 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
தனியா - 2 தேக்கரண்டி
செய்முறை:
 
பெரிய வெங்காயத்தை அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தைப்போட்டுப் பொரிக்கவும். வெந்தயம் பொரிந்ததும், கடுகு, வெங்காய விழுதைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலந்து வதக்கவும். பிறகு,  மிளகாய்த் தூள், தனியா, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரை டம்ளர் தண்ணீர்விடவும்.
 
பின்னர் புளியைக்கரைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலவை கொதித்து கிரேவியானதும், கழுவிய மீன்  துண்டுகளைபோட்டு, 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கலாம்.
 
குறிப்பு:
 
சிலர் மீன் குழம்பில் தேங்காய் அரைத்து ஊற்றுவதுண்டு. தேவைப்பட்டால் 2 துண்டுகள் தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் எடுத்தும்  சேர்க்கலாம்.