திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

சத்தான முருங்கைப்பூ முட்டை பொரியல்!

முருங்கைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைப்பூ முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள்:
 
முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு
சீரகம் - கால் தேக்கரண்டி
முட்டை - ஒன்று
கறிவேப்பிலை - 5
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 
 
முதலில் முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவேண்டும். பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்கவேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை  மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும். 
 
வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு மற்றும்  மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி  வேக வைக்கவேண்டும். இப்பொழுது முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து  ஊற்றவேண்டும். நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும். சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.