1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:44 IST)

சுவையான காலிப்ளவர் முட்டை பொடிமாஸ் செய்ய !!

தேவையான பொருட்கள்:

காலிப்ளவர் - 1 பூ
முட்டை - 2
மிளகாய் தூள் - 2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:

எடுத்துக்கொண்ட காலிபிளவரை சிறிதாக நறுக்கி, சூடான நீரில் 5 நிமிடம் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையான பொருட்களை ஒன்றன் பின்னர் ஒன்றாக சேர்த்து, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை நன்கு வதங்கியதும் காலிபிளவரை சேர்ந்து வதக்க வேண்டும். காலிப்ளவர் நன்கு வதங்கிய பதத்திற்கு வந்ததும், மிளகாய்பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர், அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி, முட்டை உதிரி பதத்திற்கு வரும் வேளையில், அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினாள் சுவையான, இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் காலிப்ளவர் முட்டை பொடிமாஸ் தயார்.