கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல் செய்ய...!

Sasikala|
மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா  ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்...
 
தேவையான பொருட்கள்:
 
மத்தி மீன் - அரை கிலோ 
மிளகு - 2 தேக்கரண்டி 
சீரகம் - 2 தேக்கரண்டி 
சோம்பு - 1 தேக்கரண்டி 
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 20 பல் 
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி 
தயிர் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

 
செய்முறை:
 
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்து  கொள்ளவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த மிளகு, சீரகம், சோம்பு பொடிகள் மற்றும் எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் கழுவிய மீனை சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில்  குறைந்தது 2 மணி நேரம் வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பிசறிய மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் இரு பக்கமும் மீன் மொறு மொறு என  வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :