1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (17:58 IST)

காரசாரமான ஆந்திரா மீன் குழம்பு செய்வது எப்படி?

தென்னிந்திய பாணி மீன் குழம்பு - சாதம் எப்போதும் சலிக்காத ஒன்று. அந்த வகையில் புளியுடன் கூடிய காரமான ஆந்திரா மீன் குழம்பு செய்முறை இதோ உங்களுக்கு…


தேவையான பொருட்கள்:   
மீன் குழம்பு பேஸ்ட்டுக்கு..: 2 தேக்கரண்டி எண்ணெய், 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1/2 தேக்கரண்டி முழு கருப்பு மிளகு, 3/4 கப் வெங்காயம், 1/4 கப் பூண்டு , 1/2 கப் தக்காளி,

மீன் குழம்புக்கு…:
250 கிராம் மீன், 1/4 கப் எண்ணெய், 1/2 தேக்கரண்டி கடுகு, 2 பச்சை மிளகாய், 1/4 கப் வெங்காயம், 3-4 பூண்டு, 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 சிறிய உருண்டை புளி , கறிவேப்பிலை, உப்பு

செய்முறை:  
முதலில் மீன் குழம்புக்கு பேஸ்ட் தயாரிக்க ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சீரகம், பெருஞ்சீரகம், மிளகு மற்றும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

பின்னர் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் வரை மீண்டும் வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இவை ஆறியதும் அரைத்துக்கொள்ளவும்.  

இதே கடாயில் 1/4 கப் எண்ணெயை சூடாக்கி, கடுகு,வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும் ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்த்து மேலும் 2 கப் தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இதில் இப்போது அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மீன் துண்டுகளைச் சேர்த்து, 10-15 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் மூடி வைத்து எடுத்தால் மீன் குழம்பு ரெடி.