வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

ஓவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ (பெரிய 2 துண்டுகள்)
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - சிறிதளவு 
சோயா சாஸ் - 1 டீஸ்பூன் 
தயிர் - 1/2 கப் 
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் 
முட்டை - 1 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு 
செய்முறை:
 
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இதனுடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மஞ்சள் தூள், சோயா  சாஸ், தயிர், எலுமிச்சை சாறு, முட்டை, உப்பு ஆகியவற்றை சிக்கனுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
 
மைக்ரோ வேவ் ஓவனை 200 டிகிரி c-க்கு ப்ரீ ஹீட் (preheat) பண்ணவும். பின்னர் ஊற வைத்த சிக்கனை எண்ணெய் சிறிது சேர்த்து  மைக்ரோ வேவ் ஓவனில் வைக்கக் கூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி c-யில் 20 நிமிடம் வைக்கவும். பிறகு அதை வெளியே  எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும். மிகவும் சுவையான கிரில் சிக்கன் தயார். இதனை மயோனைஸ்  சாஸ்ஸுடன் (mayonnaise sause) பரிமாற சுவையாக இருக்கும்.