1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
  4. Excellent taste To make Nattu Kozhi Rasam...!

அட்டகாசமான சுவையில் நாட்டுக்கோழி ரசம் செய்ய...!

நாட்டுக்கோழி ரசம்
தேவையான பொருட்கள்:
 
நாட்டு கோழி  - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 15
சீரகம்  - 1  ஸ்பூன்
மிளகு  - 2   ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட்  - 2  ஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
 
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை  போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு மிளகு, சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து  கொள்ளவும்.
 
பொடித்த  மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7  விசில்  வரும் வரை வேக விடவும். இறக்கி வைத்து கருவேப்பிலை, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான நாட்டுக்கோழி ரசம் தயார். இவை சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்.
அடுத்த கட்டுரையில்
இனிப்பான சர்க்கரையின் கசப்பான உண்மை