ருசியான கருவாட்டுக் குழம்பு செய்ய...!
தேவையான பொருட்கள்:
கருவாடு - தேவையான அளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
மொச்சைக் கொட்டை - 100 கிராம்
கத்தரிக்காய் - 5
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
கருவாடு - 100 கிராம்
மிளகாய்(2), தனியா(3), மஞ்சள் தூள்(1/4 டீஸ்பூன்) - குழம்புப் பொடி
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
ஒரு கனமான வாணலியில், எண்ணெயை காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பு சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கிய பின், கத்தரிக்காய் மொச்சைக் கொட்டையையும் போட்டு வதக்கவும். பின் புளியையும் கரைத்து விட்டு, உப்பு, குழம்புப் பொடி போட்டுக் கொதிக்க விடவும்.
தளதளவென்று கொதி வந்தவுடன் நன்றாகக் கழுவிய கருவாட்டையும் போட்டுக் கொதிக்கவிட்டுப் பின் நன்றாக ஒரு சேர கொதித்தவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை தூவி இரக்கவும். ருசியான கருவாட்டு குழம்பு தயார்.